கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்ற 120 பேரை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் வரும் 14 தினங்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளனர்.
கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்ற மேற்படி 120 பேரும், அவர்கள் தங்கியிருந்த விடுதிகளிலேயே இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொது சுகாதாரப் பரிசோதகர் சமன் திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள், கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்கு எவ்வகையில் இந்த 120 பேரும் சுற்றுலா சென்றார்களென்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த சுற்றுலா வாசிகள் தொடர்பில் கதிர்காமம் பொது சுகாதாரப் பிரிவினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய பொதுசுகாதாரப் பிரிவினர் விரைந்து அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அவர்களை தனிமைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















