பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறி, ஆயிரக்கணக்கானோர் பிரமாண்ட பேரணியொன்றில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அந் நாட்டில் 1605ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி பிரித்தானிய மன்னரின் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட போது கய் பாக்ஸ் என்ற நபர் அரசால் கொல்லப்பட்டார்.
இவரது நினைவு தினத்தையொட்டி அதிகாரத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் ”மில்லியன் மாஸ்க் பேரணியே” லண்டனில் நடைபெற்றுள்ளது.