மொபைல் அப்பிளிக்கேஷன்களில் பகிரப்படும் குறுந்தகவல்கள் தானாகவே அழியக்கூடிய வசதிகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில் சில தினங்களுக்கு முன்னர் இவ் வசதி வாடஸ் ஆப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதேபோன்று இன்ஸ்டாகிராமில் ஏற்கணவே தரப்பட்டுள்ளது.
இவ் வசதியினை இன்ஸ்டாகிராமில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
முதலில் இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனை திறந்து Direct Message வசதிக்கு செல்லவும்.
அங்கு படம் அல்லது வீடியோ அனுப்பப்பட வேண்டியவரின் கணக்கினை அல்லது குழுவினை தெரிவு செய்யவும்.
அதன் பின்னர் கமெரா ஐகானை தெரிவு செய்து புதிய படம் அல்லது வீடியோ ஒன்றினை பதிவு செய்துகொள்ளவும்.
தொடர்ந்து View Once, Allow Reply, Keep in Chat எனும் வசதிகளில் View Once என்பதை தெரிவு செய்யவும்.
அதன் பின்னர் Send என்பதை கிளிக் செய்து குறித்த கோப்பினை அனுப்பவும்.
இவ்வாறு அனுப்பப்பட்ட கோப்பு ஆனது ஒரு முறை பார்வையிடப்பட்ட பின்னர் தானாகவே அழிந்து விடும்.