தாம்பத்ய வாழ்வில் ஏற்படும் சில பிரச்சினைகளுக்கு தீர்வாக பயன்படுத்தப்படும் வயாகரா மாத்திரைக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?
கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ள அதே அமெரிக்க நிறுவனமான Pfizer நிறுவனம்தான், வயாகரா மாத்திரைகளையும் தயாரிக்கிறது! இப்படி வயாகரா மத்திரையைக் குறித்து கூறும்பட்சத்தில் மற்றொரு உண்மையையும் கூறித்தான் ஆகவேண்டும்.
அது என்னவென்றால், உண்மையில் வயாகரா மாத்திரை முதலில் தாம்பத்ய வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக தயாரிக்கப்படவில்லை!
இதய தமனியில் விரிவு ஏற்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் Pfizer நிறுவனம் ஈடுபட்டிருந்தது.
அந்த நேரத்தில், இந்த மாத்திரையை சோதனை முயற்சியாக கொடுத்து விளைவுகளை ஆராயும்போது, அது பாலுணர்வு ரீதியிலான விடயங்களுக்கு உதவுவதை தற்செயலாக கண்டுபிடித்தனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த உண்மை வெளியாக, அதைப் பயன்படுத்திக்கொண்டு மருந்தகங்கள் சரமாரியாக விளம்பரம் செய்து வருவாய் பார்க்கும் முயற்சியில் இறங்கிவிட்டன.
ஆனால், மருத்துவரின் ஆலோசனையின்றி இஷ்டத்திற்கு வயாகரா மாத்திரையை எடுத்துக்கொண்டால், அது கடைசியில் மாரடைப்பில் கொண்டுபோய் விட்டுவிடும் அபாயம் சிலருக்கு உள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்!