கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிற்கு செல்லத் தயாரான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீட்டிற்குச் செல்லத் தயாரான நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
களனி ஹெட்டிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அம்பாந்தோட்டை கொரோனா வைத்தியசாலையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 657 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.