கொழும்பு – 11 பகுதியை சேர்ந்த 40 வயதான ஆண் ஒருவரும், களனியை சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரும் உயிரிந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட சுவாசிப்பதில் சிரமம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் பாணந்துறையை சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் இன்று புதன்கிழமை இதுவரையான காலப்பகுதியில் மூவர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் பதிவான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மரண எண்ணிக்கை 44ஆக உயர்ந்தது.