கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தொண்டமான் நகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழைகாரணமாக குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக தற்காலிக வீட்டின் சுவர் ஈரமடைந்து இன்று காலை வீழ்ந்துள்ளது. இதன் போதே சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இன்று காலை தாயார் உணவு தயாரித்துக்கொண்டிருந்தபோது சிறுவன் உணவருந்திக்கொண்டிருந்துள்ளான்.
இதன்போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய சிறுவன் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளான்.
எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் வை்தியசாலையில் உயிரிழந்துள்ளான்.


















