ரொறன்ரோவில் இன்று வரை மர்மம் துலக்கப்படாத ஒன்பது வழக்குகளில் ஈழத் தமிழ்ச் சிறுமி ஒருவரின் மரணமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கனடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சர்மினி ஆனந்தவேல் என்ற,15 வயதுடைய சிறுமி, 1999ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார்.
அதன் பின்னர் காணாமல் போயிருந்த அவரது உடல் எச்சங்கள், 1999 ஒக்ரோபர் மாதம், Finch East Parkஇல் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
இன்று வரை இந்த மரணம் தொடர்பாக பொலிசார் சந்தேக நபர் எவரையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.