இந்தியாவில் ஏற்கனவே உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கையில், அதற்கு சமமாக சர்க்கரை நோயும் ஒரு பெரிய ஆரோக்கிய கவலையாக உள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கையில், அதற்கு சமமாக சர்க்கரை நோயும் ஒரு பெரிய ஆரோக்கிய கவலையாக உள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான உணவுகளில் புளி சேர்க்கப்படுகிறது. நல்ல புளிப்புச் சுவையுடன் இருக்கும் புளி ஒரு நார்ச்சத்துள்ள பழம்.
இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி3 போன்றவை மிகவும் அதிகமாகவும், வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி6, வைட்டமின் பி5, ஃபோலேட், காப்பர் மற்றும் செலினியம் போன்றவையும் அடங்கும்.
மேலும், சர்க்கரை நோயாளிகளை உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெனில் சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவை மோசமான அளவில் உயர்த்தும்.
எனவே தான் சர்க்கரை நோயாளிகள் எந்த ஒரு உணவை உண்பதற்கு முன்பும், அது பாதுகாப்பானதா அல்லது இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு புளி நல்லது என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அது உண்மை தானா என்று பலரும் யோசிக்கலாம்.
உண்மையில் புளி நாள்பட்ட சர்க்கரை நோயாளிளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் புளியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் 23 தான் உள்ளது.
இது மிகவும் குறைவான அளவாக கருதப்படுகிறது. அதே சமயம் புளியில் நார்ச்சத்து மட்டுமின்றி, பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
புளி விதையின் சாறுகள் இயற்கையாக அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை மற்றும் அவை இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்கவும், கணைய திசுக்களின் சேதத்தை மாற்றியமைக்கக்கூடியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் புளியில் ஆல்பா அமைலேஸ் என்னும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் நொதிப்பொருள் இருப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பெப்டிக் அல்சர் மிகவும் வேதனையாக இருக்கும். இவை அடிப்படையில், வயிறு மற்றும் சிறு குடலின் உட்புறத்தில் தோன்றும் புண்களாகும். ஆனால் புளி சாப்பிட்டால், அதில் உள்ள பாலிஃபீனோலிக் பண்பு, அல்சரைத் தடுக்கும்.
புளி இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் பொருள். புளியில் உள்ள ப்ளேவோனாய்டுகள் , உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.
இதனால் இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களின் தேக்கம் தடுக்கப்படும். மேலும் புளியில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவி புரியும்.