உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் மக்களுக்கு தெரியவரும். ஆனால் வடகொரியாவில் என்ன நடந்தாலும் வெளியுலகத்திற்கு தெரியாத சூழலும் இருக்கிறது..
இந்நிலையில், வடகொரியாவில் ஏற்கனவே உணவு பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி நிலையில், உணவு மற்றும் உணவுபொருட்களை வீணடித்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து மூன்று புயல் மற்றும் பொருளாதாரத் தடை போன்ற காரணங்களால் கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டது வடகொரியா தத்தளித்து வருகிறது.
மேலும், அணு ஆயுத தயாரிப்பு போன்ற விஷயங்களில் அந்நாட்டு அரசு பணத்தை செலவழித்து வந்த நிலையில், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, வடகொரியா அதிபர் மாளிகை சார்பாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பில், உணவை வீணடிப்பது பொருளாதாரத்தை வீணடிப்பதற்கு சமம் மற்றும் எந்த சூழ்நிலையிலும் உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.