இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.
இந்நிலையில் பெருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக நான்கு உப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என 32 பேர் அக்குழுக்களில் அங்கம் வகிக்கின்றனர்.
இதன் ஆரம்ப நடவடிக்கையாக கிராமிய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் அடிப்படையில் அரச பொறிமுறையை கிராமத்தை நோக்கிக் கொண்டு செல்வது இதன் பிரதான நோக்கமாகும். அதற்காகவே உப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்து அது தொடர்பில் இந்தக் குழுக்கள் அறிக்கையிட வேண்டும்.
தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய பொறுப்பு அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பஸில் ராஜபக்சவின் வழிகாட்டலுடன் இதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும்.