இலங்கையில் உள்ள சிறைகளில் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை இன்றையதினம் (15) 437 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றுக்குள்ளான 108 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறை ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனிய தெரிவித்தார்.
வெலிக்கடை, போகம்பர, பூசா, மாத்தறை மற்றும் குருவிட்ட சிறைகளில் இருந்தே நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.