நாட்டில் பிளவுகளை அதிகப்படுத்திய கலாசாரத்தை மாற்றியமைப்பதில் அமெரிக்கா ஒரு பெரிய பணியை எதிர்கொள்கிறது என்று அமரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பெராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றமையை அடுத்து அமெரிக்கா மிகவும் தீவிரமாக பிளவுபட்டுள்ளது என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் 2020 அமெரிக்க தேர்தலில் ஜோ பைடனின் வெற்றி அந்த பிளவுகளை சரிசெய்வதற்கான தொடக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
ஒரு தேசத்தை கையாள்வதை அரசியல்வாதிகளின் முடிவுகளுக்கு மட்டும் விட முடியாது, இந்த விடயத்தில் கட்டமைப்பு மாற்றம் மற்றும் மக்கள் ஒருவருக்கொருவர் செவிசாய்ப்பது ஆகியவையும் அவசியமாகின்றன.
உலகத்தை மாற்றக்கூடிய அந்த எச்சரிக்கையான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள இளைஞர்களை முன்வரவேண்டும். அதுவே மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
அமரிக்கா இப்போது மிகவும் பிளவுபட்டுள்ளது. 2008 ல் தாம் ஜனாதிபதி தேர்தலிலில் வென்றபோது இருந்ததை விட நிச்சயமாக இதுவே அதிகம் என்று முன்னாள் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பல ஊடகங்கள் சமீபத்திய ஆண்டுகளில் தவறான செய்திகளை வெளியிட்டன. எனினும் உண்மை வெளிவந்த நேரத்தில் பொய்கள் ஏற்கனவே உலகத்தை சென்றடைந்துவிட்டன.
இந்தநிலையில் அதிகரித்துவரும் சமத்துவமின்மை மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமெரிக்காவுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள் போன்ற சமூக பொருளாதார காரணிகளின் விளைவாகவும் அமரிக்காவில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக ஒபாமா சுட்டிக்காட்டியுள்ளார்.