பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் தீபாவளி கொண்டாட்டம் என்பதால் நாமினேஷன் செய்யப்பட்ட நபர்களில் யாரையும் வெளியில் அனுப்பாமல் எவிக்ஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியே அனுப்ப நினைக்கும் போட்டியாளர்களை நாமினேஷனில் போட்டியாளர்கள் கூறியுள்ளனர்.
இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் சுச்சி, அனிதா இரண்டு பேரை நாமினேட் செய்துள்ளனர். மேலும் ஆரி கூறுகையில் பாலாவை நாமினேட் செய்துள்ளார். பாலாவின் காதல் அவரின் கண்ணை மறைக்கின்றது என்று வெளிப்படையாக கூறி நாமினேட் செய்துள்ளார்.