கொரோனாவிற்கான நேர்மறையான பரிசோதனை முடிவைப் பெற்ற ஒருவருடன், பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தொடர்பில் இருந்ததால், பிரதமர் சுய தனிமைப்படுத்தி கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா காரணமாக ஏற்கனவே சிகிச்சை பெற்று, அதன் பின் அதில் இருந்து மீண்டு வந்தார்.
இந்நிலையில், தற்போது கொரோனாவுக்கான நேர்மறை பரிசோதனை பெற்ற ஒருவருடன் பிரதமர் தொடர்பில் இருந்ததாஅல், அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
பிரதம மந்திரி அலுவலத்தில் இருந்தே ஜோன்சன் தன்னுடைய பணிகளை செய்து வருவார், என்று செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
எம்.பியான Lee Anderson கடந்த வெள்ளிக் கிழமை கொரோனாவிற்கான அறிகுறிகளைப் பெற்றுள்ளார். இதையடுத்து சனிக்கிழமை அந்த எம்.பி.பரிசோதிக்கப்பட்டார். அதன் பின் ஞாயிற்றுக் கிழமை அவர் நேர்மறையான முடிவை பெற்றார்.
ஏனெனில் குறித்த எம்.பியுடன் கடந்த வியாழக்கிழமை போரிஸ் ஜோன்சன் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தற்போது அந்த எம்.பிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தி கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.