வெளிநாடு ஒன்றில் இருந்து வந்த நிலையில் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞனை சாரதி மதுபானம் வாங்க அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த அம்பியுலன்ஸ் சாரதியின் செயற்பாடு தொடர்பில் குளியாப்பிட்டிய வைத்திய அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை குறித்த சாரதி தனது உதவியாளரிடம் மதுபானம் வாங்கி வருமாறு கூறியுள்ளார். எனினும் அவர் அதனை விரும்பாமையினால் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞனை அனுப்பி மதுபானம் பெற்றுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.