சுமார் 700 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கொவிட் தொற்றுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர்களில் 145 பேர் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் மொத்தமாக 707 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் பலர் குணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.