முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் சட்டவிரோதமான முறையில் காடழிப்பில் ஈடுபட்டதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வில்பத்து பகுதியின் கல்லாறு பிரதேசத்தில் சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத காடழிப்பில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட், தனது சொந்த நிதியில் குறித்த பிரதேசத்தில் மரங்களை நட வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பான வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கான சட்டச்செலவுகளை செலுத்த வேண்டும் என்று ரிசாத் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளைப் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான மனுவை சுற்றாடல்துறை சார்பு அமைப்புக்கள் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.