யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
தற்போதைய கோவிட் 19, சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு, சுகாதார நடைமுறைகளுக்கமைய இன்று கந்தசஷ்டி முதலாம் நாள் உற்சவத்தின் போது அழகிய இடப வாகனத்தில் முருகப் பெருமான் எழுந்தருளி, உள் வீதியுலா வந்தார்.
அரசாங்க அறிவுறுத்தல்களின் படி, ஆலயத்தினுள் அடியவர்கள் எவரும் அனுமதிக்கப்படாத போதிலும், கந்தசஷ்டி விரதகாரர்கள் பலர் சமூக இடைவெளிகளைப் பின்பற்றி வழிபாடியற்றயதைக் காண முடிந்தது.