மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு பொதுமக்களிற்கு தடைவிதிக்கப்பட்ட சமயத்தில், அங்கிருந்து வெளியேறிய ஒருவரை பொதுமக்கள் பிடித்து, பொலித்தீனால் சுற்றி பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பகுதியை சேர்ந்த ஒருவர், தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி மேல் மாகாணத்தை விட்டு வெளியேறி வலஸ்முல்ல பகுதியிலுள்ள உறவினர் வீடொன்றிற்கு சென்றுள்ளார்.
வலஸ்முல்லவில் உள்ள போவல பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இதை அறிந்த கிராமவாசிகள் அங்கு சென்று, அவரிடம் வினவியுள்ளனர். எனினும், அவர் தப்பியோட முயன்றார்.
அவரை பிடித்த கிராம மக்கள் கயிற்றினால் கட்டி வைத்துள்ளனர். அவரது முகத்தை பொலிதீன் கவர் மூலம் மூடியுள்ளனர்.
இது குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அவரை கைது செய்துள்ள பொலிசார், பி.சி.ஆர் பரிசோதனைக்காக வலஸ்முல்ல ஆதார மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.