நாட்டில் இரண்டாவது கொரோனா அலையாக உருவெடுத்த மினுவாங்கொடை கொரோனா கொத்தணி தற்போது முழுமையாக கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மினுவாங்கொடையில் ஆரம்பமான கொரோனா கொத்தணியில் சுமார் 3,106 தொற்றாளர்கள் வரை இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களில் 136 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறிய இராணுவத் தளபதி , பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே குறித்த கொரோனா கொத்தணியை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.