பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்று மாரடைப்பால் காலமானார்.
செய்தி வாசிப்பாளராக தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் கதாநாயகியாக வளர்ந்திருக்கிறார் லொஸ்லியா.
கனடாவில் வசித்து வரும் இவரது தந்தை நேற்று மாரடைப்பால் காலமானார், ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் லொஸ்லியாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் வனிதா விஜயகுமார் வெளியிட்ட டுவிட்டில், லொஸ்லியா அப்பா இறந்த செய்தி அறிந்து மேலும் கவலை அடைந்துள்ளேன்.
கொடூரம்… எப்படி தாங்குகிறார்களோ தெரியவில்லை. அவர் தான் குடும்பத்தை காப்பாற்றி வந்தார், 3 மகள்கள் வேறு… மனமுடைந்துவிட்டேன்.. வாழ்க்கையை கணிக்க முடியவில்லை…பயமாக இருக்கிறது…அவரின் உடலை கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.



















