இலங்கையில் நேற்றைய நிலவரத்தின் படி நாட்டில் 382 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவர்களில் 231 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் 231 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் , கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 42 பேரும் , களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த 20 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் குருநாகலில் இருந்த 11 பேரும் காலியில் இருந்த 02 பேரும் , இரத்தினபுரி , கேகாலை , மொனராகலை , யாழப்பாணம் மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒரு கொரோனா தொற்று நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை போகாம்பறை சிறைச்சாலையில் 41 கைதிகளும் , வெலிக்கட சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது