கொரோனா வைரஸை மவுத் வாஷ், முப்பதே வினாடிகளில் கொல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடைகளில் கிடைக்கும் மவுத்வாஷ்கள் கொரோனா நோயாளிகளின் எச்சிலிலுள்ள கொரோனா கிருமிகளைக் கொல்லுமா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வேல்ஸிலுள்ள Cardiff பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 0.07% cetylpyridinium chloride (CPC) என்ற வேதிப்பொருளைக் கொண்ட மவுத்வாஷ் கொரோனா கிருமிகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் Dentyl போன்ற மவுத்வாஷைக் கொண்டு ஆய்வகத்தில் அது கொரோனா கிருமியைக் கொல்லுமா என ஆயு மேற்கொள்ளப்பட்டது.
வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையிலும் 12 வாரங்கள் இந்த மவுத்வாஷ் கொரோனா நோயாளிகளின் எச்சிலிலுள்ள கொரோனா கிருமிகளைக் கொல்லுமா என்பதை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வுகளின் முடிவுகள் 2021ஆம் ஆண்டு ஆரம்பத்தில் வெளியிடப்பட உள்ளன. ஆய்வை தலைமையேற்று நடத்தும் Cardiff பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் David Thomas, ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகள் நல்ல முடிவுகளைக் கொடுத்துள்ளன, என்றாலும், நோயாளிகள் மீதான சோதனைகள் தேவை என்று கூறியுள்ளார்.
அத்துடன், பல் மற்றும் வாய் தொடர்பான மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவரான Dr Nick Claydon என்பவரும், இந்த ஆய்வு மிகுந்த பலனுள்ளதாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த சோதனை முடிவுகள், Cardiff பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வு முடிவுகளிலும் பிரதிபலிக்குமானால், cetylpyridinium chloride (CPC) அடங்கிய Dentyl போன்ற மவுத்வாஷும் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாற இயலும்.
கைகளைக் கழுவுதல், சமூக விலகல் மற்றும் மாஸ்க் அணிதலுடன், இனி மவுத்வாஷ் பயன்பாடும் இனி கொரோனாவுக்கெதிரான பயன்பாட்டில் இப்போதும் எதிர்காலத்திலும் அத்தியாவசியமான ஒன்றாக மாற வாய்ப்புள்ளது என்கிறார்.