பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் செம்பருத்தி என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பல எபிசோடுகளை தாண்டி இந்த சீரியல் TRPயில் முதல் இடத்தை எல்லாம் பிடித்திருந்தது. இப்போது சீரியல் TRP கொஞ்சம் பின் தங்கி உள்ளது என்று தான் கூற வேண்டும்.
இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டார் நடிகை ஜனனி. இதை அவரே ஒரு வீடியோவில் அழுதுகொண்டே கூறியிருந்தார்.
தற்போது ஒரு பேட்டியில் அவர், பரதா நாயுடு கூறுவது போல் சீரியலில் அவ்வளவு அரசியல் இல்லை, சீக்கிரமே பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்.
அந்த சீரியலில் ஒருவரை மாற்ற வேண்டும் என்றால் நான் ஆதியை தான் சொல்வேன். அவருக்கு சீரியலில் நடிக்க ஆசை இல்லை, படங்களில் நடிக்க தான் விரும்புகிறார்.
எனவே அவரை படங்களில் நடிக்க அனுப்பிவிட்டு வேறொரு நடிகரை சீரியல் நாயகனாக நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.