இலங்கை மஞ்சள் இறக்குமதியை தடைசெய்தமை காரணமாக தமிழகம் ஈரோட்டில் பெருமளவு மஞ்சள் தேங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீட்டை பெற்ற ஈரோட்டு மஞ்சள் இலங்கைக்கும், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் மஞ்சளுக்கு இறக்குமதி தடையை விதித்துள்ளமையால் இதுவரைக்கு சுமார் 40 கோடி ரூபா பெறுமதியான மஞ்சள் தேங்கி இருப்பதாக ஈரோடு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு மாத்திரமல்லாமல் இலங்கையில் இருந்து ஏனைய நாடுகளுக்கும் தமிழகத்தில் இருந்து மஞ்சள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.
எனினும் இலங்கை அரசாங்கத்தின் மஞ்சள் இறக்குமதி தடைக்காரணமாக தமது மஞ்சள் உற்பத்தி தேங்கிப்போயுள்ளது.
எனவே இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் பேசி இந்த மஞ்சள் இறக்குமதி தடையை நீக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை இந்த தடையை அடுத்து இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து மஞ்சள் கடத்தி வரப்படுகின்ற சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன.