கொழும்பு றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணியாற்றும் 5 வைத்தியர்கள் உள்ளிட்ட 16 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய கூறியுள்ளார்.
மேலும் வைத்தியசாலையுடன் தொடர்புடைய 60 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
எனினும் எவருக்கும் வைத்தியசாலைக்குள் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும், அவர்களுக்கு சமூகத்தில் தொற்றுக்குள்ளானதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.