பிராண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி தொடர்பில் விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக செயல் பொலிஸ் அதிபர் அறிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் இணைப்பாளர் நிஷாரா ஜெயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
பிராண்டிக்ஸ் கொரோனா வைரஸ் கொத்தணியால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து விசாரிக்க அனுபவம் வாய்ந்த, மூத்த காவல்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய புலனாய்வாளர்களை நியமிக்குமாறு 2020 அக்டோபர் 27ஆம் திகதி அன்று சட்ட மாஅதிபர் செயல் பொலிஸ் அதிபரை பணித்திருந்தார்.
எனினும் அந்த செயற்பாடு முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவித்து நவம்பர் 05ஆம் திகதியன்று சட்டமா அதிபர் தமக்கு உடனடியாக விளக்கமளிக்குமாறு செயல் பொலிஸ் அதிபருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்தே செயல் பொலிஸ் அதிபர் தற்போது குறித்த விசாரணை குழு தொடர்பில் சட்டமா அதிபருக்கு தகவல் அளித்துள்ளார்.