சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழவேண்டும் என்பதையே விரும்புகிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரன் தெரிவித்துள்ளார்.
எனினும், எங்களுடைய மக்களுக்கு கிடைக்க வேண்டிய அபிவிருத்திகள் இன்று வரையிலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற 2021ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.