மாவீரர்தினத்தை அனுட்டிக்க தடைவிதிக்கக்கூடாதென கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (20) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டம், தனிமைப்படுத்தல் சட்டங்களை பாவித்து உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தவதை தடை செய்யக்கூடாதென வடக்கு பொலிஸ்மா அதிபர், வடக்கு சுகாதாரசேவைகள் பணிப்பாளரிற்கு கட்டளையிடுமாறு கோரி, விடுதலைப் புலிகளின் மூத்த போராளி கப்டன் பண்டிதரின் தாயார் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனினால் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (20) வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மேலும் 8 பேர் சார்பில் சட்டத்தரணி கே.சயந்தனினால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கும் இன்று வரை தாக்கல் செய்யப்பட்டது.
இன்று காலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பொலிஸ் பேச்சாளரும், சட்டத்தரணியுமான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நேற்று மாலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். இன்றைய வழக்கில் பொலிசார் சார்பில் முன்னிலயாகவே அவர் வந்திருக்கலாமென கருதப்படுகிறது.