கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அளுத்மாவத்தையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியமையினால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசாங்கம் தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி மோதரை, இக்பாவத்தை பகுதி மக்கள் அளுத்மாவத்தை வீதியில் ஆர்பாட்டத்தை மேற்கொண்டுள்ளார்கள்.
இன்று காலை ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அந்தப் பகுதிக்கு விரைந்த பொலிஸார் நிலைமைகளைக் கட்டுப்படுத்த முயன்றபோதிலும், அதிகளவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள்.