பாம்புக் கடிக்கு இலக்காகி மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை பா.கஜதீபன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
நேற்று இரவு பாம்புக்கடிக்கு இலக்காகி மந்திகை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் தற்போது சாதாரண வடுதிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் வைத்தியசாலைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் சிவாஜிலிங்கத்தை சந்தித்து நலம் விசாரித்தனர்.