செயல்திறன் நிரூபிக்கப்படாத சீனாவின் கொரோனா தடுப்பு மருந்துகளை அரசாங்கம் நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசானநாயக்க இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது,
மூத்த அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்த சில வர்த்தகர்கள் தடுப்பூசியை அறிமுகப்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
சீனாவின் தடுப்பூசி பரிசோதிக்கப்படவில்லை, உலக சுகாதார அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்த வகையான தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வது மோசடியாக மாறும் என்று கூறினார்.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை உலகசுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டது. சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் தடுப்பூசிகளை ஏற்கவில்லை. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்தார்.