முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இருட்டுமடு பகுதியில் பிறந்த தனது குழந்தைக்கு ஏணை கட்ட வீட்டில் ஏறிய குடும்பஸ்தர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதூர்.
இச்சம்பவம் கடந்த 21 ஆம் திகதி அன்று இடம்பெற்றுள்ளது. 36 வயதுடைய இராமசாமி மோகன்றாச் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தின் போது காயமடைந்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக யாழ்போதனா மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு பின்னர் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குழந்தை பிறந்து பத்து நாட்கள் கூட ஆகாத நிலையில் ஏணை கட்ட ஏறியபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.