நாட்டின் முன்னணி கலைஞர் ஒருவரின் மகனும் பிரபரல நடிகருமான ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டியில் தொலைக்காட்சி நாடகம் ஒன்றில் படப்பிடிப்பில் பங்கேற்ற பிறகு இவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் பி.சி.ஆர் பரிசோதனை செய்திருந்தார்.
இதில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த நபர் தங்கியிருந்த ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெல்தெனிய வட்டாரங்கள் தெரிவித்தன.



















