தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக எந்த அளவிற்கும் இறங்குவதற்கு தயாராக இருப்பதை சுமந்திரன் வெளிப்படுத்தி வருகின்றார் என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், சுமந்திரனுடைய மாற்றம் உண்மையான மனமாற்றம் கிடையாது. மாவீரர்தினம் தொடர்பில் திட்டமிட்டு வழக்கைத் தாக்கல் செய்துள்ளார் அவர். மக்களை வீடுகளுக்குள் முடக்குவதற்காகவே அது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநாள் நாடாளுமன்றத்தில் கொள்கை ரீதியான இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்தது. அதில் இருந்து தப்புவதற்காகவே சுமந்திரன் இந்த நாடகத்தை அரங்கேற்றினார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.