மேல் மாகாணத்தில் அரச அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரை உயர் அதிகாரி ஒருவர் தாக்குதல் மேற்கொள்ளும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரி என கூறப்படும் நபர் ஒருவர், தனது நிறுவனத்தின் பெண் ஊழியருக்கு தாக்குதல் மேற்கொள்ளும் காட்சி குறித்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
தொலைபேசி இலக்கம் ஒன்றை கண்டுபிடித்து தருமாறு இந்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். அதனை 5 நிமிடங்களுக்குள் தேடி கொடுத்தாலும் குறித்த பெண் ஊழியரை கடுமையாக திட்டியதுடன், தனக்கு தொடர்ந்து மனரீதியான அழுத்தம் கொடுப்பதாக அந்த ஊழியர் இந்த காணொளியில் குற்றம் சுமத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குறித்த பெண் ஊழியர் தனது உயர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேல் மாகணத்தில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
https://www.facebook.com/watch/?t=3&v=2670031756641338


















