கண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்படுகின்றன.
இதன்படி நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிவரை குறித்த பாடசாலைகள் முடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கண்டி நகரில் அமைந்துள்ள 45 பாடசாலைகள் இவ்வாறு நாளை முதல் மூடப்படவுள்ளது.
கண்டியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதை அடிப்படையாக கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.