கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் கொரோனா காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மாகாணம் கொரோனாவை கட்டுப்படுத்த திணறி வரும் நிலையில் ஆல்பர்ட்டா பிரீமியர் ஜேசன் கென்னி, சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்து, புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார்.
ஆல்பர்ட்டாவின் எட்மண்டன், கல்கரி பிராந்தியங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உட்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளளது மற்றும் வெளிப்புற நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு தலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 18 முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் குளிர்கால விடுமுறை தொடங்கும்.
தங்கள் குடும்பத்தினருடன் மட்டுமே உணவகங்களில் உணவருந்த அனுமதி உட்பட பல கட்டுப்பாடுகளை ஆல்பர்ட்டா பிரீமியர் அறிவித்துள்ளார்.