அமெரிக்காவில் மருத்துவமனைக்கு சென்ற பதின்ம வயது பெண்ணை மர்ம நபர் ஒருவர் சீரழிக்க முயன்ற காட்சி கமெராவில் பதிவாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புரூக்ளினிலுள்ள ஒரு மருத்துவமனையில் அப்பாயின்ட்மென்ட் பெற ஒரு தாயும் மகளும் சென்றிருக்கிறார்கள்.
அப்போது, அந்த பதின்ம வயது பெண் தன் ஸ்கூட்டரை கொண்டு மருத்துவமனைக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றிருக்கிறார்.
அப்போது திடீரென ஒரு நபர் அவளைப் பிடித்து கீழே தள்ளி அவளை வன்புணர முயன்றிருக்கிறார்.
பயங்கரமாக சத்தமிட்டபடி அந்த பெண் போராடியதால், அந்த மர்ம நபர் அவளை விட்டு விட்டு ஓடியியிருக்கிறார்.
இந்த காட்சிகள் மருத்துவமனையிலிருந்த CCTV கமெராவில் பதிவாகியுள்ளன. பிரபலமான ஒரு மருத்துவமனையில், பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக அந்த நபர் தன் மொப்பெட்டில் ஏறி தப்பிச் செல்லும் காட்சிகளும் கமெராவில் பதிவாகியுள்ளன.
வீடியோ காட்சிகளையும், அந்த நபரின் புகைப்படங்களையும் வெளியிட்டு பொலிசார் அந்த நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.