சஜித்துடனான சந்திப்பின் பின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயம்! முக்கிய தகவல்
சஜித்துடனான சந்திப்பின் பின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ள விடயம்! முக்கிய தகவல்
அரசின் முறைகேடுகளை – அநீதிகளை – கொடுஞ்செயல்களை – அக்கிரமங்களை எம்மால் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
விரைவில் இதற்கெல்லாம் ஒரு முடிவு வேண்டும்; தீர்வு வேண்டும், அதேவேளை எதிர்க்கட்சியும் பலமாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிடும்போதே சந்திரிக்கா குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாகவே இந்த அரசு செயற்படுகின்றது.
கொரோனாவின் மூன்றாவது அலை நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இந்த அரசின்பொறுப்பற்ற செயற்பாடுகளே பிரதான காரணமாகும்.
நாட்டினதும் மக்களினதும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.