காடழிப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு விமானப்படை நிறுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இதனை தெரிவித்துள்ளார். காடழிப்பைக் கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவம் மற்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக இலங்கை விமானப்படை (SLAF) தங்கள் விமான சொத்துக்களைப் பயன்படுத்தி காடழிப்பை கண்காணிக்க நிறுத்தப்படும்.
இந்நிலையில், மாவட்ட செயலாளர்கள், அரசு முகவர்கள் விழிப்புடன் இருப்பதுடன், சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராக நிற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், நில அபகரிப்பில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்ய சிறப்பு பிரிவு நிறுவப்பட்டுள்ளது என்றும் அவர் பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.