கொள்ளுப்பிட்டி குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
திடீர் சுகயீனமடைந்த நிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திடீர் சுகயீனமடைந்த கொள்ளுப்பிட்டி குற்ற விசாரணை பொறுப்பதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.