அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இலங்கையில் பிறந்த அஞ்சலி டி சில்வா, மோனேஷ் நகர சபைக்கு உறுப்பினரனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
விக்டோரியா மாநிலத்தின் உள்ளூராட்சி சபை ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கையர், அஞ்சலியாகும்.
பசுமைக் கட்சியில் போட்டியிட்ட அஞ்சலி, இவ்வாறு வெற்றி பெற்றுள்ளார். அதற்கமைய எதிர்வரும் நாட்களில் மேனேஷ் நகரத்திற்காக அவர் பணியாற்றவுள்ளர்.
அங்கு அவரது பங்கின் ஒரு பகுதியாக, மேனேஷ் நகர சபை பாலின சமத்துவக் குழு மற்றும் பன்முக கலாச்சார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பணியாற்றுவார் என குறிப்பிடப்படுகின்றது.
அஞ்சலி நான்கு வயதில் தனது தங்கை சரணி மற்றும் பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் குடிபெயர்ந்தார்.
அஞ்சலி மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் முதல் தர கௌரவ பட்டதாரி ஆகும். அவர் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பாடல் பிரிவில் கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
நன்கு அறியப்பட்ட பார்க்லேஸ் மற்றும் லண்டனில் உள்ள Royal bank of Scotland உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களின் வழக்கறிஞராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
தனது தொழில் வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு (குறிப்பாக பெண்கள்) பல தனித்துவமான சேவைகளைச் செய்துள்ளார் என கூறப்படுகின்றது.d