கொரோனா தொற்றுக்குள்ளான உயர்தர மாணவனோடு நெருங்கிய தொடர்புடைய 19 மாணவர்களை சுயதனிமைப்படுத்தியுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர் .
மேலும் கல்வி பயிலும் 406 மாணவர்களில் ஒருவர் கூட பாசாலைக்கு சமூகளிக்கவில்லை
ஹற்றன் கல்வி வலயம் குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலய மாணவர்களே இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
நேற்றுமுன்தினம் அப்பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் மாத்தறை சுயதனிமை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவரோடு தொடர்பிலிருந்து 19 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதிபர், பாடசாலை நிர்வாகத்தினருக்கு பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது .
இதேவேளை பாடசாலையில் கற்பித்தல் நடவடிக்கை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் பாடசாலையின் ஆசிரியர்கள் 30 பேரில் நான்கு பேர் மாத்திரமே பாடசாலைக்கு வருகைத்தந்தனர்.
மேலும் கல்வி பயிலும் 406 மாணவர்களில் ஒருவர் கூட பாசாலைக்கு சமூகளிக்கவில்லை. பாடசாலை வளாகம், வகுப்பறைகள் அனைத்தும் தொற்று நாசினி தெளித்து தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.