மல்வானை – பியகம வீதியில் காரொன்றை செலுத்திச் சென்ற நபரொருவர் (64) மல்வானை யபரலுவ பிரதேசத்தில் வைத்து காருக்குள்ளேயே மரணமடைந்துள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நபர் தனது மனைவி மற்றும் சித்தி சகிதம் தொம்பே கிம்புல்விலவத்த பிரதேசத்திலுள்ள தனது வீட்டிலிருந்து சென்றுகொண்டிருக்கும் போது திடீரென சுகயீனமுற்றதையடுத்து காரை வீதியோரத்தில் நிறுத்திய பின்னர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
தொம்பே கிம்புல்விலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த வீ. சீ .டி ரஸல் கிரிஸ்டோபர் த அல்விஸ் (64) மரணமடைந்த நபர் சுகயீனமுற்று சிகிச்சை பெற்றுவந்துள்ளதால் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.ஜே.எம்.ஆர் சமரசிங்க மேற்கொண்டுள்ளார்.