கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தி வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் எட்டு கொவிட் மரணங்கள் பற்றிய விரபங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
1. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதான பெண் ஒருவர் கடந்த 23ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் மற்றும் மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
2. கொழும்பு 9 தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹரகம அபேக்சா புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று காரணமாக ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இன்று உயிரிழந்துள்ளார். புற்று நோய், நியூமோனியா காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
3. மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான பெண் ஒருவர் கடந்த 25ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் மற்றும் மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
4. கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றாளி என அடையாளம் காணப்பட்டதன் பின்னர், ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். சுவாசப்பை பிரச்சினை மற்றும் கொவிட் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்
5. கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர் நேற்று வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொவிட் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் இவர் உயிரிழந்துள்ளார்.
6. கொழும்பு 10 மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் நேற்று வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு சிறுநீரக நோய், கொவிட் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பினால் இவர் உயிரிழந்துள்ளார்.
7. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர் கடந்த 25ம் திகதி வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். சுவாசப்பை மற்றும் கொவிட் காரணமாக ஏற்பட்ட நியூமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.
8. கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 70 வயதான ஆண் ஒருவர் கடந்த 25ம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்று மற்றும் சிறுநீரக நோய்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.