கொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு சிறைச்சாலை கைதிகள் சிலருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 600 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் ஆபத்தான குற்றச் செயல்கள் தொடர்பில் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் எவருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொலநறுவை, கேகாலை கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த குற்ற விசாரணை திணைக்களத்தின் முன்னாள் இயக்குனர் ஷானி அபேசேகர கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உள்ள திடீர் சுகயீனம் காரணமாக அவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஷானி அபேசேகர கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். அதன் பின்னர் அவர் வெலிக்கட சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.
நோய் தொற்றின் பின்னர் ஷானி அபேசேகரவை கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்புமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.