தமிழர்கள் அதிகம் எலுமிச்சை காயை பயன்படுத்துவார்கள். ஜோதிடம் முதல் அன்றாட உணவு வரை தமிழர்களிடத்தில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதே போன்று எலுமிச்சை தோல் பல்வேறு பயன்களை தரவல்லது. உடல் எடை குறைப்பு முதல் புற்றுநோய் வரை இது உதவுகிறது.
எலுமிச்சை தோலை டீ போன்று தயாரித்து குடித்தால் ஏராளமான நலன்கள் கிட்டும்.
மருத்துவ குணம்
ஒரு சில பழங்கள் மட்டுமே எல்லாவித பயன்களையும் கொண்டிருக்கும். அந்த வரிசையில் எலுமிச்சையும் அடங்கும். இதன் முழு பாகமும் பல்வேறு மருத்துவ பயன்பாட்டிற்கு உதவுகிறது.
இதற்கு காரணம் இதிலுள்ள வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் எ, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் தான்.
புற்றுநோய் அபாயம்
எதை சாப்பிட்டாலும் புற்றுநோய் வந்து விடுமா என்கிற பயம் நம்மில் பலருக்கு உள்ளது. ஆனால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து உங்களை காக்க எலுமிச்சை தோல் போதும். உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடை செயய் இது பயன்படும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
குப்பை என்று வீசும் தோலில் புற்றுநோய் செல்களை அழிக்கக் கூடிய அதி சக்தியிருப்பதை கண்டு ஆராச்சியாளர்களே ஆச்சரியப்பட்டுள்ளனர்.
உடலை சுத்தம் செய்யும் எலுமிச்சை தோல்
கல்லீரல், பெருங்குடல், இரத்த தந்துகிகள் முதலியவற்றில் தேங்கி உள்ள அழுக்குகளை முழுவதுமாக வெளியேற்றும் தன்மை எலுமிச்சை தோலிற்கு உண்டு.
தேவையானவை
- 1 கண்ணாடி ஜாடி
- 10 எலுமிச்சை தோல்
- வெள்ளை வினிகர்
தயாரிப்பு முறை
- முதலில் எலுமிச்சையை நன்றாக அலசி கொள்ளவும். அடுத்து இதை அரிந்து இதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து தோலை ஒரு ஜாடிக்குள் போடவும்.
- பின்னர் இவை மூழ்கும் அளவிற்கு வெள்ளை வினிகரை( white vinegar) இவற்றில் சேர்க்கவும். 2 வாரம் கழித்து இதன் நீரை மட்டும் வடிகட்டி கொள்ள வேண்டும்.
- பிறகு தினமும் சமமான அளவு இந்த சாற்றையும் நீரையும் கலந்து குடித்து வந்தால் கழிவுகள் வெளியேறி உடல் முழுக்க சுத்தமாகி விடும்.