ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள குடாகோர்ஜி பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும், அதே பகுதியை சேர்ந்த ஆணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணமாகிய சில நாட்களுக்கு பிறகு, மாப்பிள்ளை வீட்டார் தொடர்ந்து வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி அன்று அந்த பெண் தீக்குளித்துள்ளார். இதனைப் பார்த்த கணவர் அதனை தடுக்காமல் வீடியோவாக பதிவு செய்து பெண் வீட்டாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
தீவிரமான தீக்காயங்கள் ஏற்பட்டதால், அந்த பெண்ணை ஜெய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
அதன்பேரில், அங்கு அழைத்து சென்றனர். ஆனால், அதற்குள் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கணவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 6 பேரை கைது செய்தனர்.
மனைவி தீக்குளித்ததை கணவர் வீடியோ எடுத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.